Minister Jegatheeswari | முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஜெகதீஸ்வரி
முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, சென்னை போஜராஜா நகர் பென்சில் தொழிற்சாலை மற்றும் கொருக்குப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்ட முதியவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தலின் பேரில், தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் இந்த நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் வயதான முதியவர்கள் இதன்மூலம் பயன் அடைந்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதியவர்களுக்குப் புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. மேலும், பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்களது வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த முதியோர்களின் துயரைப் போக்கும் வகையில், வாடகைத் தொகையையும் நிதியுதவியாக அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார். தங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை அறிந்து, தேவையான உதவிகளை வழங்கியது வாழ்வில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக முதியவர்கள் தெரிவித்தனர்.. தங்கள் வாழ்நாளின் இக்கட்டான சூழலில், சரியான நேரத்தில் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் முதியவர்கள் நெகிழ்ச்சியோடு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.