அரசியல்

TVK MLA Sunil Anand| துறை செயலாளர்களுடன் மேட்டுப்பாளையம் MLA சுனில் ஆனந்த் ஆலோசனை

துறை செயலாளர்களுடன் மேட்டுப்பாளையம் MLA சுனில் ஆனந்த் ஆலோசனை

thanthitv

#tvk #mlasunilanand

மேட்டுப்பாளையம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், குடிநீர் விநியோகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அரசுத் துறை செயலாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ என். சுனில் ஆனந்த் மனு அளித்துள்ளார். கோவை, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நகராட்சி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும், காரமடை பகுதியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்தும், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. என். சுனில் ஆனந்த் அரசுத் துறை செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதியில் நகராட்சி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து, நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து, காரமடை பகுதியில் உள்ள 6 ஊராட்சிகளுக்குத் திருப்பூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2-ன் கீழ் குடிநீர் வழங்குவது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவையும் எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தச் சந்திப்புகளின்போது, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், குடிநீர் விநியோகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தொடர்புடைய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

Breaking | Veeramani Case | ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த நபர் |நடுநடுங்கிய ஜெம் வீரமணி | புது ட்விஸ்ட்

Thoothukudi Mu*der | தாயை கொ*றுவிட்டு மகள்களை கடத்தி சென்ற சம்பவம் - தந்தையும் பலி..

Anbil Mahesh Bail Plea | அன்பில் மகேஷ் ஜாமீன் மனு - தேதி குறிப்பிட்டு கோர்ட் அதிரடி உத்தரவு

Anbil Case தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக வழக்கு - நீதிமன்றத்தில் சரணடைந்தார்

Gingee Girl Missing Case| பாட்டி திடுக்கிடும் வாக்குமூலம்.. இவ்ளோ நாள் இது எப்படி வெளில வராம போச்சு?