தமிழகத்தின் கல்வி தரம் மிக தாழ்ந்து போவதற்கு துணைவேந்தர் நியமன முறைகேடு ஒரு முக்கிய காரணம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தெரிவித்து உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது குறித்து
முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போதைய ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டின் பலன் எந்த சமுதாயத்துக்கும் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.