வெறும் 794 ஓட்டுகளில் திமுகவை வீழ்த்திய அதிமுக... யாருக்கு வெற்றி என கணிக்கவே முடியா கிருஷ்ணகிரி தொகுதி கிருஷ்ணகிரி நகர்பகுதிகளையும், காவேரிப்பட்டணத்தையும் உள்ளடக்கிய தொகுதி. மா, மல்லி, நெல் சாகுபடினு விவசாயமே தொகுதி மக்களுடைய பிரதான தொழிலா இருக்கு. காவேரிப்பட்டணம் பகுதியில நிப்பட்... பால்கோவா தயாரிப்பு, தீப்பெட்டி தயாரிப்புனு சிறு குறு தொழில்கள் மக்களோட முக்கிய வேலைவாய்ப்பா இருக்கு. தேர்தல் ஆணையம் பிப்ரவரி 23-ல வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல்ல, தொகுதியில ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 777 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 200 பெண் வாக்காளர்கள் 60 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தமாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இருப்பதா தெரிவித்திருந்தது.