அரசியல்

எல்லையை சுற்றி வளைத்த பறக்கும் படை - ஒரு வாகனம் விடாமல் அதிரடி

தந்தி டிவி

கேரளாவில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், தமிழக கேரள மாநில எல்லைகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 26-ஆம் தேதி கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலங்களில் இன்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தமிழக, கேரள எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள நாடு காணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார் குன்னு, தாளூர் உள்ளிட்ட 6 சோதனைச் சாவடிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தமிழக பறக்கும் படை அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வாகனங்களை கேரள பறக்கும் படை அதிகாரிகளும், சோதனை செய்த பின்பே அனுமதித்து வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக