#edappadipalanisamy #epsvsmkstalin #dmkvsadmk அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி உறுதி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். சென்னை நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியை மக்கள் அகற்றத் தீர்மானித்துவிட்டார்கள் என்றும், திமுக ஆட்சியில் மக்கள் துன்பம் அனுபவிக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். அதிமுக-டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்றும் , வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். காங்கிரஸ்-திமுக கூட்டணி தான் குழப்பத்தில் உள்ளது என்றும், திமுக காங்கிரஸின் அடிமை போல உள்ளது என்றும், அதிமுக பாஜகவின் அடிமை அல்ல என்றும் கூறினார். முதல்வர் ஸ்டாலினுடன் பொது விவாதத்திற்கு தயாராக உள்ளேன் என்றும், தமிழ்நாடு அதிக கடன் வாங்கும் மாநிலமாக மாறியுள்ளது என்றும் கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில் இருமொழிக் கொள்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.