கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என அசோசெம் அமைப்பு தெரிவித்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு இது சாத்தியமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் மாநிலங்களின் நிதிநிலை மோசமாகி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வர அடுத்த சில ஆண்டுகளுக்கு மாநில அரசுகள் சம்மதம் தெரிவிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதே கருத்தை தான் பா.ஜ.க.வின் ஜி.வி.எல். நரசிம்மராவும் தெரிவித்துள்ளார்.