அரசியல்

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது - நிர்மலா சீதாராமன்

கடந்த 6 ஆண்டுகளில், நாட்டின் மொத்த கடன் மூன்றரை சதவீதம் குறைந்துள்ளதாகவும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 16 லட்சம் பேர் வரி செலுத்துவோர் வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் , 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 28 ஆயிரத்து 400 கோடி டாலர் அன்னிய முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் குடும்பங்களின் மாத செலவீனத்தில் நான்கு சதவீதம் சேமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் கீழ் நடப்பு நிதியாண்டில் 40 கோடி கணக்குகள் தாக்கல் ஆகி உள்ளதாகவும், இந்த வரிவிதிப்பு முறையால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை பலனடைந்து உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், வரி சீரமைப்பு செயல்படுத்தப்படும் என்றும், கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன், நிகர உள்நாட்டு உற்பத்தி ஜி.எஸ்.டி. மதிப்பில் 52 புள்ளி2 சதவீதத்தில் இருந்து 48 புள்ளி 7 சதவீதமாக மூன்றரை சதவீதம் வரை குறைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்