கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளார். தனது குடும்பத்துடன், தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவர், அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தனது தலைமையிலான அரசை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் முயற்சிகள் பலிக்காது என்று தெரிவித்தார்.