டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதன் மூலம், அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். மத்திய அரசு அதிகாரியாக இருந்த அவர், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். பெண்களுக்கான மெட்ரோ ரயில், பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களே, ஆம் ஆத்மி வெற்றிக்கு அடித்தளமாக கூறப்படுகிறது.