கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தின் போது பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுசுனன், அதிமுக ஆட்சி அமைந்தால் ஒரு ஆண்டிற்குள் கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வருவோம் என உறுதியளித்தார். மேலும் மெட்ரோ திட்டம் தாமதமானதற்கு திமுக அரசு சரியான ஆவணங்களை மத்திய அரசுக்கு வழங்காததே காரணம் என குற்றம்சாட்டிய அவர், மக்களின் தேவைகளை முன்னிட்டு திட்டங்களை விரைவாக செயல்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.