சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பிற மாநிலங்களில் உள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும் அவரது மனுவை விசாரிக்கும் போது, தனது மனுவை இணைத்து விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.