டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மர்மப் பை கிடந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் கேட்பாரின்றி கிடந்த மர்மப் பையை விமான நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தின் மூன்றாம் நிலையில் மர்மப் பை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.