நேற்று இரவு சேஷாச்சலம் வனப்பகுதியில் உட்பட்ட நாகபட்லா பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை சுமந்து கொண்டு வந்த பத்திற்கும் மேற்பட்டோர் போலீசாரை கண்டதும் செம்மரங்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரை போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள 14 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.