கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. 111 புள்ளி 2 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம், ''இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்'' மற்றும் ''ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்'' ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது. பிரமாண்டமான இந்த சிவலிங்கத்தை முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.