இந்தியா

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமக்கு அடுத்தப்படியாக தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமிக்க, மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் எஸ்.ஏ. பாப்டேவை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 18 ஆம் தேதி புதிய நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். பாப்டே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக இருப்பார். உச்சநீதிமன்றத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள எஸ்.ஏ. பாப்டே, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள மகாராஷ்டிர தேசிய சட்டப் பல்கலைக் கழக வேந்தராகவும் பணியாற்றியவர்.

இவர் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி தேதி வரை தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவி வகிப்பார். ஆதார் எண் இல்லாவிட்டாலும், அடிப்படை சலுகைகள் மற்றும் நிவாரணங்களை மறுக்க கூடாது என உத்தரவிட்ட அமர்வில் இடம்பெற்றவர் பாப்டே. டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்த அமர்விலும் இடம்பெற்றவர். மாதா மகாதேவி மீது வழக்குப்பதிய கர்நாடக அரசுக்கு தடை விதித்த அமர்வில் இடம்பெற்றவர் பாப்டே. பசவண்ணா ஆதரவாளர்களின் நிர்பந்தத்தை அடுத்து, மாதா மகாதேவி மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்