BRS எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து 3 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு காங்கிரஸ் கட்சிக்கு தாவிய பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பாக தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவர் மூன்று வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானவில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுக்களை மூன்று மாதங்களுக்கு விசாரித்து முடிவெடுக்க அம்மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை இறுதியில் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத பேரவை தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மூன்று வாரத்துக்குள் முடிவெடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளது.