ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கட்டடத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பருவ தேர்வு எழுத 65 சதவீத வருகைப் பதிவு போதுமானது என்ற நிலை இருந்ததாகவும், தற்போது அதை 75 சதவீதமாக கல்லூரி நிர்வாகம் மாற்றிவிட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். 65 சதவீதம் வருகைப் பதிவு இருக்கும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் கட்டடத்தின் மீது ஏறி நின்று, போராட்டம் நடத்தினர்.