இந்தியா

கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்

கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் தவித்து வருகின்றன.

தந்தி டிவி

குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. அங்கு ஏராளமான மான்கள், குதிரைகள், குரங்குகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. சரணாலயத்திற்குள் வனவிலங்குகள் குடிப்பதற்காக ஆங்காங்கே 17 சிமெண்ட் குடிநீர் தொட்டிகளும், 52 இயற்கை குளங்களும் கட்டப்பட்டுள்ளன. வறட்சி காரணமாக குளங்களும் , குடிநீர் தொட்டிகளும் வறண்டு காணப்படுகின்றன. ஒருநாள் விட்டு ஒருநாள் வனத்துறையினர் தொட்டிகளில் ஊற்றி செல்லும் குறைந்த அளவு தண்ணீர் விலங்குகளுக்கு போதுமானதாக இல்லை.

இதனால் சரணாலயத்தில் சுற்றி திரியும் குரங்குகள் சாலையில் தேங்கி கிடக்கும் சிறிதளவிலான மழை நீரை குடித்து தாகத்தை தணித்து கொள்கின்றன. சேற்றுடன் காணப்படும் அந்த நீரை குடிக்க குரங்குகள் போட்டி போடும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது. இதேபோல் முனியப்பன் ஏரி பகுதியில் தண்ணீர் இன்றி குதிரைகள் தவித்து வருகின்றன. அங்கு குடிக்க தண்ணீர் இன்றி ஒரு குதிரைக்குட்டி உயிருக்கு போராடி வருகிறது.

குடிநீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது. பல மான்களை நாய்கள் கடித்து குதறியதால் உயிரிழந்துள்ளன. தண்ணீர் தேடி தவித்து வரும் விலங்குகளை பாதுகாக்க சரணாலயத்தில் உள்ள தொட்டிகளில் நாள்தோறும் போதிய தண்ணீரை ஊற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி