இந்தியா

சபரிமலை சென்ற ரஹேனா வீடு மீது தாக்குதல்...

சபரிமலைக்கு சென்ற மாடலிங் பெண் ரஹேனா பாத்திமாவின் வீட்டின் மீது ஹெல்மட் அணிந்த மர்ம நபர்கள், கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தந்தி டிவி

* தெலங்கானாவை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் கேரளாவை சேர்ந்த மாடலிங் பெண் ரஹேனா பாத்திமா ஆகியோர் இன்று சபரிமலை சென்றனர்.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் இருவரும் சன்னிதானத்தை நெருங்கிச்சென்றனர்..

* அங்கே ஐயப்ப பக்தர்கள் அவர்களை முற்றுகையிட்டு கடுமையாக போராடினர்.. பல மணி நேர போராட்டத்திற்கு பின், பக்தர்களுடனும், அப்பெண்களுடனும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரையும் போலீசார் பத்திரமாக திருப்பி அனுப்பினர்..இதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

* பெண் செய்தி வாசிப்பாளர் கவிதாவுடன் வந்த ரஹேனா பேகம் கேரளாவை சேர்ந்த ஒரு மாடலிங் பெண் என தெரியவந்தது.. இவர் மாற்றுமதப்பெண் என்பதால், அவருக்கு சபரிமலையில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது..

அவரது வீடும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

* சபரிமலைக்கு சென்ற மாடலிங் பெண் ரஹேனா பாத்திமாவின் வீட்டின் மீது ஹெல்மட் அணிந்த மர்ம நபர்கள், கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மாற்று மதத்தவரான ரஹேனா சபரிமலை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பூட்டியிருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள், உள்ளே இருந்த உபயோகப் பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* இதில் வீட்டின்னுள்ள பூந்தொட்டிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணம்,சேர், மற்றும் கேஸ் சிலிண்டர்கள், கண்ணாடி வீட்டின் முன் கதவையும் உடைக்கப்பட்டுள்ளன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்