அசாமில், குடும்பத்தலைவிகளுக்கு, இரண்டாயிரம் ரூபாய், வழங்கப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
அசாம் மாநிலம், திப்ருகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, அசாம் மக்களுக்கு 5 உத்தரவாதங்களை அளித்தார். அதன் படி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 365 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்றும், 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் உறுதி அளித்தார். ஒரு வீட்டிற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ராகுல்காந்தி வாக்குறுதி கொடுத்தார்.