நாட்டில் கடந்த 6 நாட்களில் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன் லைன் விற்பனை தளங்கள் சுமார் 19 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்துள்ளன. கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை பண்டிகை சிறப்பு கால விற்பனை நடைபெற்றது. இதில் பிளிப்கார்ட்டு மற்றும் அமேசான் நிறுவனங்கள் 90 சதவீத விற்பனையை கைப்பற்றியுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் முதலிடமும், அமேசான் நிறுவனம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த ஆன் லைன் வியாபாரம் அக்டோபர் மாதம் முழுவதும் சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன்கள் அதிக அளவில் விற்பனை ஆகி உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.