மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் வீட்டுக்கடன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில் ராஜேஷ் வத்வான் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் ராஜேஷ் வத்வான் உள்ளிட்ட 11 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. போலியான சலுகைகளை அறிவித்து, தமிழகத்தில் 218 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக, தனியார் நிறுவனம் அளித்த புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி சென்னையில் இருந்து மும்பை சென்ற தமிழக போலீசார், 2 பேரையும் கைது செய்து அழைத்து வந்தனர். இந்தியா முழுவதில் இருந்து கிடைத்த பல்வேறு மோசடி வழக்குகளில், கைது செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் அவர்களை சிறையில் அடைத்திருந்தனர். சென்னையில் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், மும்பை சிறையில் இருந்தவர்களை, சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.