இந்தியா

Maharashtra Election | ``இனி கள்ள ஓட்டுக்கு சான்ஸே இல்ல..'' | நாளை தேர்தலில் அறிமுகமாகும் புதிய முறை

thanthitv

மகாராஷ்டிர தேர்தலில் வாக்களிக்க Facial Recognition முறை அறிமுகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்முறையாக தேர்தலின்போது ‘முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மூலம் வாக்காளர்களைச் சரிபார்க்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.... நாஷிக் மாவட்டத்தில் நாளை நடைபெறும் சட்ட மேலவை இடைத்தேர்தலில் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.... சாதாரண வாக்காளர் அட்டைகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்தொகுதியில் மொத்தம் 619 வாக்காளர்கள் மட்டுமே உள்ளதால், இது ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டாலும் வாக்காளர்கள் வழக்கம்போல் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2020-ல் தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் இத்தொழில்நுட்பம் இந்தியாவில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | Chennai | சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் - CM விஜய் அதிரடி உத்தரவு

Breaking | MK Stalin | DMK | நேற்று வெளியான வெள்ளை அறிக்கை | ஸ்டாலின் திடீர் ஆலோசனை

ADMK | TVK | 4 MLA-கள் ராஜினாமா ஏற்பு.. ஹைகோர்ட் கொடுத்த உத்தரவு

Chennai | போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த இளைஞர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Breaking TN Election 2026 விராலிமலையுடன் காலியான 6 தொகுதிகள் இடைத்தேர்தல் எப்போது?