கேரள மாநிலத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வயநாடு மாவட்டத்தில் இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள, மேப்பாடி என்ற இடத்தில், பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் அந்த பகுதியே மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது. அங்கு 150க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குருச்சிமாலா என்கிற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..