இந்தியா

சொத்துக்காக 6 பேரை கொன்ற கேரள பெண் - விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைதாகியுள்ள பெண் ஜோலி, மேலும் பலரை கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயி கிராமத்தில், சொத்திற்காகவும், விரும்பிய நபரை திருமணம் செய்யவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த இந்த வழக்கில் கொலையாளி ஜோலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜோலியை 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, கொலையாளி ஜோலியிடம் நடத்திய விசாரணையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆறு பேரை கொன்ற அந்த பெண், மேலும் 5 பெண்கள் உள்பட பலரை கொல்ல திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் இறந்தவர்களின் உறவினர்களான வின்சென்ட், சுனீஷ் டொமினிக் ஆகிய இருவர் மரணத்திலும் ஜோலிக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இவரின் கொலை திட்டங்களுக்கான காரணம் தெரியாமல் போலீஸ் குழம்பியுள்ளனர். தோண்ட தோண்ட நீளும் ஜோலியின் கொலை பட்டியல் கேரள காவல்துறையை அதிர வைத்துள்ளது. ஜோலியை கேரள போலீஸ், காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில், கொலை சம்பவத்தில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியும்...

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்