இந்தியா

"கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்" - கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்​ணீர் திறக்காததும் வெள்ளப் பாதிப்புக்கு ஒரு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்​ணீர் திறக்காததும் வெள்ளப் பாதிப்புக்கு ஒரு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று கேரள அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமிழக அரசு உரிய முறையில், முன்கூட்டியே கவனமாக தண்ணீர் திறந்திருந்தால் வெள்ளப் பாதிப்பை குறைத்திருக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவேகமாக உயர்ந்ததாகவும், அப்போது கேரள தலைமை செயலாளர், தமிழக தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு, உரிய நேரத்தில் படிப்படியாக தண்ணீரை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேரளா அரசு மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.ஆகஸ்ட் 14 ஆம் தேதி 137 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 15 காலை வேகமாக அதிகரித்த நிலையில், வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதே நாள் காலை 8 மணி அளவில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், இடுக்கி அணையை முழுமையாக திறக்க வேண்டிய நிலை உருவானதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் உரிய முறையில் கட்டுப்பாட்டுடன் நீரை திறந்திருந்தால், இடுக்கி அணையில் இருந்து கூடுதலாக நீரை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என்றும்,

வெள்ளப் பாதிப்பு இந்தளவு ஏற்பட்டு இருக்காது என்றும் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மீது அபாண்டமாக பழி சுமத்துவதா..? - கேரள அரசின் குற்றச்சாட்டால் தமிழகம் அதிர்ச்சி

வெள்ள விவகாரத்தில் தமிழகம் மீது கேரளா அரசு புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . கேரளா அபாண்டமாக பழி சுமத்தி இருப்பதாக முல்லைப் பெரியாறு பாசன பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை, மீறாமல் செயல்பட்டு வரும் தமிழகம் மீது , குற்றஞ்சாட்டுவது சரியல்ல என்றும் அப்பகுதி மக்கள், கூறியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி