கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பழகியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 733 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய, செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.