கர்நாடக மாநிலம், குடகு பகுதியில், வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 2 மாதக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர், பத்திரமாக மீட்டனர். மீட்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், ஆற்றின் நடுவே கயிறு கட்டி, குழந்தையை மீட்டு கொண்டு வரும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.