இந்தியா

கர்நாடகாவில் இன்று15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - காலை 7 மணிக்கு துவங்கியது வாக்குப்பதிவு

கர்நாடகாவில் இன்று 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

தந்தி டிவி

கர்நாடகாவில் இன்று 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. இடைத் தேர்தல் களத்தில் மொத்தம்165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி உள்ளிட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இவர்களில் 13 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த 15 தொகுதிகளில் குறைந்தது 8 இடங்களிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே, எடியூரப்பா தலைமையிலான பாஜகஆட்சி தப்பும் என கர்நாடக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை