இந்தியா

இந்தியர்களின் மதுபழக்கம் எப்படி இருக்கிறது - உலக சுகாதார நிறுவனத்தின் அதிர்ச்சி அறிக்கை

10 ஆண்டுகளில், இந்தியர்களின் மதுப்பழக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* 10 ஆண்டுகளில், இந்தியர்களின் மதுப்பழக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

* 2005ல், 2 புள்ளி 4 லிட்டராக இருந்த தனிநபர் மது உட்கொள்ளும் அளவு, 2016ல் 5 புள்ளி 7 லிட்டராக உயர்ந்துள்ளது என்றும், அறிக்கை ஒன்றில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

* சர்வதேச அளவில் ஏற்படும் அதிகமான மரணங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

* அதில் சர்வதேச அளவில் எய்ட்ஸ், வன்முறை மற்றும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை விட மது குடிப்பதால்தான் அதிக மரணம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மது குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால் 200 விதமான நோய்களை மனித உடலில் உருவாக்குகிறது. இவற்றில் முக்கியமானவை கல்லீரல் பாதிப்பு, புற்று நோய்கள், காசநோய் , நுரையீரல் சுழற்சி உள்ளிட்டவை ஆகும்.

* மது குடிப்பதால் உடல் நலம் பாதித்து நோய் வாய்ப்பட்டு வருடந்தோறும் 30 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இது மொத்த இறப்பு விகிதத்தில் 5.3 சதவீதம் ஆகும்.

* எய்ட்ஸ் நோயால் 1.8 சதவீதம் பேரும், சாலை விபத்துக்களால் 2.5 சதவீதம் பேரும், வன்முறை தாக்குதலில் 0.8 சதவீதம் பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

* எனவே, எய்ட்ஸ், புற்று நோய், நீரிழிவு, சாலை விபத்துக்கள் மற்றும் வன்முறையால் உயிரிழப்பவர்களை விட மது குடிப்பதால் மரணம் அடைபவர்களே மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இருந்த போதிலும் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக அளவில் தற்போது 230 கோடி பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்