விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்ட்டர் நிகழ்ந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெண் டாக்டர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட இடத்திலேயே நேற்று அதிகாலை நிகழ்ந்தது. தகவல் அறிந்து கூடிய அப்பகுதி மக்கள்
தெலங்கானா போலீசார் மீது பூ தூவி பாராட்டு தெரிவித்தனர். இனிப்பு விநியோகித்து, ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். சிலர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.