மத்திய பிரதேச மாநிலம் மான்ஸரில் பிரிந்து வாழும் மனைவியை கணவர் ஆள் வைத்து கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்பா நடன பயிற்சி மையத்திற்குள் புகுந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பல், வலுகட்டாயமாக ஒரு பெண்ணை இழுத்து சென்றனர். கும்பலை பார்த்ததும் அச்சம் அடைந்த பெண்கள், என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினார்கள்... தகவல் அறிந்த போலீசார், காரை மடக்கிபிடித்து பெண்ணை மீட்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் மனைவி, வேறொருவருடன் லிவ் - இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதால் கணவரே கடத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெண்ணின் கணவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.