Helicopter crash | ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம்..கர்னலுக்காக ஊரே கூடி இறுதி யாத்திரை - ராணுவ உடையோடு கதறிய மனைவி..மனதை ரணமாக்கும் துயர காட்சி
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் ரஜ்வீர் சிங் சவுஹானின் இறுதி ஊர்வலம்
கர்னல் ரஜ்வீர் சிங் சவ்ஹானும் ஹெலிகாப்டர் விபத்து - ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் இறுதி ஊர்வலம்
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் இறுதி ஊர்வலம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஞாயிறு அன்று கேதார்நாத்தில் இருந்து குப்த்காஷி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகளை ஹெலிகாப்டர் வனப்பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி உட்பட அதில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்தனர்.
விபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான லெப்டினன் கர்னல் ரஜ்வீர் சிங் சவ்ஹானும் உயிரிழந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
ஊர்வலத்தில் ராஜஸ்தான் மாநில அமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்