ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள பல்லாப்கரை சேர்ந்த நிகிதா தோமர் என்ற 19 வயதான இளம்பெண் தன் கல்லூரி தேர்வை முடித்து விட்டு தன் தோழியுடன் வந்துள்ளார். அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய 2 இளைஞர்கள், நிகிதாவை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். ஆனால் அதற்கு நிகிதா தோமர் மறுக்கவே, ஒரு கட்டத்தில் காரில் வந்த இளைஞர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நிகிதாவின் நெற்றியில் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து அடங்கிப் போனார்.
பட்டப்பகலில் கல்லூரி வாசலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.