இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில், ஆயிரத்து 500 போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.