குடகு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் வெளியேற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விராஜ்பேட்டை பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய யானை சேற்றில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 மணி நேரம் போராடி யானையை மீ்ட்டனர்.