இந்தியா

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

பாஸ்போர்ட் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் இதனை தெரிவித்துள்ளார். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், விண்ணப்பதாரரின் அனைத்து விவரங்களும் அந்த சிப்பில் பதியப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை திருத்தவோ, அழிக்கவோ முடியாது என்றும், இந்த இ-பாஸ்போர்ட்டுகளை தயாரிக்க நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 1 கோடியே 12 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்