vovt
கொரோனா காரணமாக மார்ச் 25 முதல் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி, 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. இதையடுத்து, நாளை மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். இது தொடர்பாக, விமான போக்குவரத்துறை செயலாளர், மாநில அரசுகள், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தொற்று மேலும் பரவாமல் தடுக்க நாளை உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்க வேண்டாம் என பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, விமானங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.