சினிமா

இன்று - கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்

கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளாக இன்று அவரைப் பற்றிய ஒரு தொகுப்பு...

தந்தி டிவி

தமிழ் திரையுலகில் தனது வைர வரிகளால் பாடல்களை ஜொலிக்க செய்தவர்... தமிழுக்கு தன் படைப்புகளால் புது ரத்தம் பாய்ச்சியவர்... எழுத்தில் இளமை மின்னும்... பேச்சில் தமிழ் மணக்கும்... அவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து.

ஒரு பொன்மாலைப் பொழுதில் திரையுலகில் மெல்லிய தென்றலாய் நுழைந்த வைரமுத்து, தன் பாடல்களால் இசையையும், மொழியையும் வசியப்படுத்தியவர்.

கிராமத்து புழுதி மண்ணில் தவழ்ந்து விளையாடிய வைரமுத்து 12 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். வடுகப்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முடித்தார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையில் புகுந்து, திரைப்பாடல்களில் வார்த்தை ஜாலம் நிகழ்த்தினார். 19 வயதிலேயே பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்தபோது வைகறை மேகங்கள் என்ற தலைப்பில் தனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

தனது 28 ஆம் வயதிலேயே இதுவரை 'நான்' என்ற சுயசரிதை எழுதிய வைரமுத்துவின் பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக உள்ளது. 1980 ல் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலக பயணத்தை தொடங்கிய, கவிஞர் வைரமுத்து, அடுத்த ஆண்டே, சிறந்த பாடலாசிரியருக்கான, தமிழக அரசின் விருது பெற்றார்.

1986 ஆம் ஆண்டு முதல் மரியாதை படத்தின் பாடலுக்காக தேசிய விருது என்ற உச்சத்தை தொட்டார்.

தொடர்ந்து, 2 ஆவது முறையாக1993 ஆம் ஆண்டு ரோஜா படத்திற்காக எழுதிய, சின்னச்சின்ன ஆசை பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றார்.

தொடர்ச்சியாக தனது திரையுலக பயணத்தில் கருத்தம்மா, (போறாளே பொன்னுத்தாயி )சங்கமம், (முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்) கன்னத்தில் முத்தமிட்டால் (விடை கொடு எங்கள் நாடே) தென்மேற்குப் பருவக்காற்று, ஆகிய படங்களில் எழுதிய பாடல்கள் வைரமுத்துவின் மகுடத்தில் வரிசையாக பல சியாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படத்தில் இடம்பெற்ற எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று.. என்ற பாடலுக்காக 7வது முறையாக தேசிய விருது பெற்றார், வைரமுத்து.

அலைபாயுதே படத்தில் வைரமுத்து எழுதிய, சிநேகிதனே பாடல் காதலின் நுணுக்கமான விஷயங்களைப் பந்தி வைத்தது.

இளையராஜா இசையில், வைரமுத்துவின் பாடல்கள் எல்லாமே ஒருவகையில், தனித்துவமானதுதான் என்றாலும், தனக்கு மிகவும் பிடித்ததாய் அவர் சொல்வது எது தெரியுமா..?

2003 ஆம் ஆண்டு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு இலக்கியத்துறையின் மிக உயரிய சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இதுபோல், ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது. கலைமாமணி, பத்ம விருதுகளும் வைரமுத்துவை அங்கீகரித்திருக்கின்றன.

38 ஆண்டுகால திரைப்பயணத்தில், '7 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள், 30 க்கும் அதிகமான புத்தகங்கள் என்று தனது படைப்புகளால் தமிழுலகையும், திரையுலகையும் நிறைத்திருக்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிதான், வைரமுத்துவுக்கு, கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டி பெருமைப்படுத்தினார். அந்தளவிற்கு, அவருடன், மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டியவர்.

காலத்தால் நரைக்காத தனது படைப்புகளால், தமிழை என்றும் இளமையாக, இன்று பூத்த மலர்போல புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது, இவரது எழுத்து. அவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்