தமிழ் சினிமாவில் சாமானிய மக்களின் கதைகளையும், உணர்வுகளையும் கச்சிதமாகப் படம் எடுக்கும் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான “கோழிப்பண்ணை செல்லதுரை“ படத்திற்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன... ஏகன், யோகிபாபு, சகாய பிரிகிடா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கு வழங்கப்படும் கோல்டன் கேமல் விருது, மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது...