நெட்பிளிக்ஸ் தளத்தையே முடக்கிய ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5
2016-ல் தொடங்கிய ‘Stranger Things’ தொடர், குழந்தைகள், அமானுஷ்ய சக்திகள், மறைமுக மர்ம உலகம் ஆகியவற்றை மையமாக கொண்டு அமெரிக்காவின் 80-களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் 5வது சீசன் வெளியான போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் முடங்கியதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர். அமெரிக்காவில் மட்டும் எட்டாயிரம் பேர் நெட்பிளிக்ஸ் முடங்கியதாக புகார் அளித்திருக்கிறார்கள். இதன் தாக்கம் இந்தியாவிலும் இருந்துள்ளது. புகார் அளித்தவர்களில் 51 சதவீதத்தினர் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் பிரச்சனை என்றும், 41 சதவீதத்தினர் சர்வர் கனெக்ஷனில் பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களில் சர்வர் பிரச்சனை சரிசெய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளம் மீண்டும் முழு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.