கிராமத்து வாழ்வியலில், தாத்தா - பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "நெடுநல்வாடை". 70 வயது விவசாயியாக 'பூ ராமு' நடித்துள்ளார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, இயக்குநர் செல்வகண்ணனுக்காக, நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த நண்பர்கள் 50 பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.