சினிமா

எப்படி இருக்கிறது காற்றின்மொழி ?

ஜோதிகா, விதார்த், லக்ஷ்மி மஞ்சு,குமரவேல்,மோகன் ராம்,மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர்,மற்றும் பலர் நடிப்பில் ஏ.எச்.காசிப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் கதிர் கலை இயக்கத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் "காற்றின்மொழி"

தந்தி டிவி

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஜோதிகா. அவரின் கணவர் விதார்த் ஒரு தனியார் கம்பனியில் வேலை பார்ப்பவர் .இவர்களுக்கு ஒரு மகன். தன்நம்பிக்கை கை கொடுக்கும் என நினைக்கும் ஜோதிகாவுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் தன் கணவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்.

ஆனால் அதிகம் தோல்விகளை சந்திப்பார். இருந்தும் குடும்பத்தில் சந்தோசம் அதிகம். பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு குடும்பம் நமக்கு அமையாதா என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு சந்தோசம்.இதற்கிடையில் ஜோதிகா ஹெலோ எப் எம் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வெல்வார். அப்போது ரேடியோ ஸ்டேஷன் போகும்போது நீங்கலும் ஆர்ஜே ஆகலாம் விளம்பர போர்ட் பார்த்ததும் அவருக்கும் ஆர்ஜே ஆகவேண்டும் என்ற எண்ணம் வரும். அதை உடனே முயற்சியும் செய்வார். அவரின் நம்பிக்கை வீண் போகாமல் அவருக்கு வேலை கிடைக்கும்.

ஆனால் அது இரவு நேர நிகழ்ச்சி அதுவும் அந்தரங்கங்களை பற்றி பேசும் நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் சில விஷயங்கள் விதார்த்க்கு பிடிக்காமல் போகிறது .அதோடு தன் மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற ஏக்கம் ஒரு பக்கம் - இதனால் தான் குடும்பத்தில் பிரச்னை. இந்த நேரம் பார்த்து மகன் பள்ளியில் ஒரு பிரச்னையால், மகன் வீட்டைவிட்டு ஓடிபோகிறான். மீண்டும் ஜோதிகா ஆர்ஜே வேலையை தொடர்கிறாரா? இல்லையா? இழந்த சந்தோசம் மீண்டும் குடும்பத்தில் கிடைத்ததா? என்பது தான் ராதாமோகன் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள காற்றின் மொழி.

ஜோதிகா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இவரது நடிப்பில் வந்த 36 வயதினிலே,மகளிர் மட்டும், நாச்சியார் ஆகிய படங்கள் ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் தான். அதை போல் மீண்டும் யதார்த்த நடிப்பை காற்றின் மொழி மூலமாக வெளிபடுத்தி இருக்கிறார். சொந்த குரலிலும் பேசி அசத்தியுள்ளார் .

விதார்த் எப்பவும் போல மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். ஜோதிகாவுக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார். படத்தின் கதைக்கும் இயக்குனர் நம்பிக்கைக்கும் பலம் சேர்த்து இருக்கிறார்.சிம்பு ஒரு காட்சி வந்தாலும் மனசில் நிற்கிறார்.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் என்றால் ஹலோ எப் எம் தலைமை அதிகாரியாக நடித்துள்ள லக்ஷ்மி மஞ்சு. வாவ் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக நடித்துள்ளார்.ஏ.எச்.காசிஃப் இசையில் பின்னணி இசை மற்றும் பொண்டாட்டி சாங் , ‘ஜிமிக்கி கம்மல்’ அருமை.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் வேலைக்கு செல்ல நினைக்கும் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்