திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சாங்காரனை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் ஆட்டோக்கள் மற்றும் கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தனர்