நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், 'கேப்மாரி' என்ற படத்தை தற்போது இயக்கி உள்ளார். இது, அவரது 70வது படமாகும். ஜெய், அதுல்யா, வைபவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிக அளவில் இருப்பதாக தணிக்கை குழுவினர் தெரிவித்துள்ளனர்.