கடந்த மாதம் 27ம் தேதி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடந்த INTO THE WILD நிகழ்ச்சி படப்பிடிப்பில் நடிகர் ரஜினி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.