வயநாட்டில் நிகழ்ந்தது போன்று மீண்டும் நடக்கக் கூடாது என்று பிரார்த்திப்பதாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார். தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், சிருஷ்டி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் 'மகாசேனா' படத்தின் படபிடிப்பு, கூடலூர் அருகே உள்ள சந்தன மலை பகுதியில் தொடங்கியது. செங்குத்தான மலை குன்று நடுவே உள்ள சந்தன மலை முருகன் கோயிலில் பூஜை நடத்தப்பட்டது. பின்னர் முதல் கட்ட படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. படப்பிடிப்புக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல், வயநாட்டில் உயிரிழந்த 400க்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தெரிவித்தார்...