பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான வித்யா பாலன், தமிழில் முதன்முறையாக அஜித்துடன் நேர் கொண்ட பார்வை படத்தில் இணைந்து, நடித்துள்ளார். முன்னணி நடிகரான அஜித் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும், பெண்களிடம் கனிவுடன் நடந்து கொள்பவர் என்றும் வித்யாபாலன் தனது படப்பிடிப்பு அனுபவங்களை நெகிழ்ச்சி யுடன் பதிவு செய்துள்ளார். அஜித் - வித்யா பாலன் நடிப்பில், எச். விநோத் எழுதி, இயக்கியுள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படம் ,வருகிற ஆகஸ்ட் 10 - ம் தேதி, திரைக்கு வருகிறது.