தற்போதைய செய்திகள்

கடும் போட்டிக்கு மத்தியில் TNPL ஏலத்தில் வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இவ்ளோ தொகையா..?

தந்தி டிவி
• முதல் வீரராக ஏலத்திற்கு வந்த விஜய் சங்கரை, ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பத்தே கால் லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. • தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரை ஆறே முக்கால் லட்சத்திற்கு சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நடராஜனை ஆறே கால் லட்சத்திற்கு பால்ஸி திருச்சி அணியும், பிரதோஷ் ரஞ்சன் பாலை 5 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ஏலம் எடுத்தன. • கடும் போட்டிக்கு மத்தியில் சாய் சுதர்சனை, 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. • இதன்மூலம் டி.என்.பி.எல். தொடரில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார். • இதேபோல சஞ்சய் யாதவை 17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு சேப்பாக் அணியும், சோனு யாதவ்வை 15 லட்சத்து 20 ஆயிரத்துக்கு நெல்லை அணியும், அபிஷேக் தன்வரை 13 லட்சத்து 20 ஆயிரத்துக்கு சேலம் அணியும் ஏலத்தில் எடுத்தன. • மேலும் திருப்பூர் அணி சாய் கிஷோரை 13 லட்சத்திற்கும், சேப்பாக் அணி ஹரிஷ் குமாரை 12 லட்சத்து 80 ஆயிரத்திற்கும், மதுரை அணி ஹரி நிஷாந்தை 12 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் ஏலத்தில் எடுத்தன. • நேற்று முதல்நாள் ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஏலம் நடைபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்